கடனை செலுத்த முடியாத தந்தை.. மகளை வீடு புகுந்து கடத்திய கும்பல்..பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
தேனியை சேர்ந்த 19 வயது செவிலியரான இளம் பெண்ணை காரில் கடத்திச் சென்ற 5 பேர், காருக்குள் வைத்தே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை ஐவரும் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, கடந்த 8 மாதங்களுக்கு பெண் மணி என்பவரிடம் கடன் பெற்றதாக தெரிகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் நபர் சிரமப்பட்டு வந்த நிலையில், இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தேனி காவல்துறை கண்காணிப்பாளிடம் புகாரளித்த நிலையில், ஐவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட ஐவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.