மேலே முதல் மனைவி.. கீழே இரண்டாவது மனைவி... கணவன் உயிரை காவு வாங்கிய கயிறு

Update: 2023-12-26 14:33 GMT

துறையூர் அருகேயுள்ள தேவாங்கர் நகரில் வசித்து வந்தவர் அண்ணாதுரை. துறையூர் பி.எஸ்.என்.எல்லில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த இவருக்கு, பத்மினி மற்றும் லலிதா என இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இரு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்த அண்ணாதுரை, கீழ் தளத்தில் லலிதாவையும், முதல் மாடியில் பத்மினியையும் குடி அமர்த்தியுள்ளார். அண்ணாதுரை அடிக்கடி மது அருந்தி வந்து குடும்பத்தில் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அண்ணாதுரை குடித்து விட்டு தகராறு செய்த போது, ஆத்திரமடைந்த பத்மினி கணவரை கீழே தள்ளிவிட்டிருக்கிறார். தொடர்ந்து, படுகாயமடைந்து மூச்சுத்திணறலுக்குள்ளான கணவரை பத்மினி நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், அண்ணாதுரையின் இரண்டாவது மனைவி லலிதா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பத்மினியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்