"ஆண்டாள் கோயிலில் திடீர் மாற்றம்" - ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு புகார்

Update: 2024-02-04 07:08 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில், 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலம். இங்கு, 2016ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றபோது, பழைய கொடி மரங்கள் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், அகற்றப்பட்ட மூன்று பழைய கொடி மரங்களில் இரண்டை காணவில்லை என கோயில் செயல் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். காணாமல்போன அந்த கொடி மரங்களில் விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்ததாகவும், புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட ராமர் மற்றும் மாரிமுத்து ஆகியோர் கொடி மரங்களை எடுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பழமையான யானை சிலைகளையும் காணவில்லை என, அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்