நகைக்கடையில் இருந்து தலைதெறிக்க ஓடிய இளம் பெண்...வெளியான பரபரப்பு காட்சிகள்

Update: 2023-07-27 03:56 GMT

காஞ்சிபுரத்தில் நாகரிக உடையில் வந்த இளம்பெண், நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து 6 சவரன் தங்கச் சங்கிலிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் அசோக் என்பவர் நடத்தி வரும் நகைக்கடைக்குள் நுழைந்த அந்த இளம்பெண், உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 2 தங்கச் சங்கிலியுடன் கண்ணிமைக்கும் நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து, விஷ்ணு காஞ்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்