கடனை திருப்பி தராத கருப்பையா... சரமாரியாக வெட்டி சாய்த்த மர்ம கும்பல்... மதுரையில் பயங்கர சம்பவம்

Update: 2023-08-31 09:24 GMT

சோழவந்தான் அருகே உள்ள நடுமுதலைகுளம் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர், அதே பகுதியில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த சவுந்திரபாண்டி என்பவரிடம், தனக்கு சொந்தமான நிலத்தை கிரயமாக தருவதாகக் கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 3 லட்சம் ரூபாயை கருப்பையா கடனாக வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி நிலத்தையும், வாங்கிய கடனையும் திருப்பி அளிக்காமல் கருப்பையா இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஆத்திரமடைந்த சவுந்திரபாண்டி, தனது கூட்டாளிகளுடன் கருப்பையாவை ஆட்டோவில் கடத்திச் சென்று பன்னியான் என்ற பகுதியில் அரிவாளால் சராமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுதொடர்பாக நடத்திய விசாரணையின் அடிப்படையில், கொலையில் ஈடுபட்ட சவுந்திரபாண்டி, ரவிச்சந்திரன், அரவிந்தகுமார், அருண்பாண்டி, ஆகாஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்