தொடர் விடுமுறை - இயற்கை அழகை கண்டு ரசித்த மக்கள்

Update: 2023-12-31 13:21 GMT

புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்துள்ள பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். தொடர்ந்து குடும்பத்துடன் ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களைக் கண்டும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பயணிகள் வருகை தந்ததால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்