மருத்துவக் கல்லூரியில் செவிலியர் த*கொலை.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம் | Kanyakumari

Update: 2024-01-31 02:53 GMT

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் செவிலியராக பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு முன்பே, மாணவியின் உடலை ஊழியர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், மாணவியின் சகோதரர் வடசேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில், மாணவியின் உடலை கைப்பற்றி மருத்துவமனையின் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்