காரில் பாலோ செய்த விஜிலென்ஸ் தொக்காக சிக்கிய பெண் அதிகாரி - வேலூரில் பரபரப்பு

Update: 2024-01-11 07:47 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் கார் மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், கணக்கில் வராத 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகம் ஆந்தரா எல்லை பகுதியில் கிறிஸ்டியன் பேட்டை போக்குவரத்து, சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வசந்தி என்பவர், லஞ்சம் பெறுவதாக,

வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கண்காணிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வசந்தி சென்ற காரை பின் தொடர்ந்து சென்று, சிப்காட் பாரதி நகர் பகுதி அருகே நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 3 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து பாரதிநகர் பகுதியில் உள்ள வசந்தியின் வீட்டில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்