ரூ.35 லட்சம் செலவில் வெள்ளிக்கதவை கோயிலுக்கு வழங்கிய பக்தர்

Update: 2023-08-10 12:08 GMT

ரூ.35 லட்சம் செலவில் வெள்ளிக்கதவை கோயிலுக்கு வழங்கிய பக்தர் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு திறக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த பக்தர் கிரிதர் குடும்பத்தினர் தங்கள் வேண்டுதலின்படி 35 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் செய்யப்பட்ட 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட 32 கிலோ எடை கொண்ட வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவினை நன்கொடையாக வழங்கினர். புதிதாக பொருத்தப்பட்ட வெள்ளிக் கதவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்