நண்பர்களுடன் விளையாடிய போது 100 அடி மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் - நீலகிரியில் அதிர்ச்சி

Update: 2023-08-21 14:23 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் ஹாதி என்பவர், கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஆஷிக் அருகே உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை பார்க் சைடு எஸ்டேட்டில் உள்ள மலை உச்சி பகுதியில் நண்பர்களுடன் சிறுவன் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக மலை உச்சியில் இருந்து கீழே விழுந்துள்ளான். விளையாட சென்ற மகன் வீடு திரும்பாததால் அருகில் உள்ள இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், அவரது தந்தை அப்துல் ஹாதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் சனிக்கிழமை அன்று, சிறுவனை மலைப்பகுதியில் தேடத் தொடங்கிய போலீஸார், சுமார் 100 அடி பள்ளத்தில் சிறுவனின் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட சென்ற சிறுவன் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்