சக மாணவனை அடித்த சிறுவன். ஆத்திரத்தில் Revenge எடுத்த அதிமுக பிரமுகர். பரபரப்பு சிசிடிவி காட்சி
திருப்பாச்சேத்தி அருகே தனது மகனை தாக்கிய சிறுவனை, அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி. வேம்பத்தூர் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகனை, 9 ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்செல்வியின் கணவரும், அதிமுக பிரமுகருமான மெய்ஞானமூர்த்தி, தனது மகனை தாக்கிய சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.