தீக்காயங்களுடன் தெருக்களில் சுற்றி வந்த சிறுவன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2023-11-26 03:34 GMT

வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரை சேர்ந்தவர் 8 வயது சிறுவன். இவரது பெற்றோர், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒருவரையொருவர் பிரிந்த நிலையில், சிறுவனின் தாய் 2 ஆம் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் சென்றிருக்கிறார். இந்நிலையில், அத்தையின் கட்டுபாட்டில் வளர்ந்து வந்த சிறுவன், முறையாக பள்ளி செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அத்தை, சிறுவனது கால்களில் சூடு வைத்து விரட்டிய நிலையில், காலில் தீக்காயங்களுடன் கொணவட்டம் பகுதியில் சிறுவன் சுற்றி திரிந்திருக்கிறார். இது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சிறுவனை மீட்டனர். ஊர் பெயர் சொல்ல தெரியாமல் தவித்த சிறுவனுடன் 150 கிலோ மீட்டர் ஜூப்பில் சுற்றிய போலீசார், இறுதியில் சிறுவன் வசித்து வந்த இடத்தை கண்டறிந்த நிலையில், அவரின் அத்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்