ஒரேநாளில் 92 பேராசிரியர்கள் ட்ரான்ஸ்பர்; 56 பேர் டிஸ்மிஸ் - கலக்கத்தில் அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள்
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்ற பின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- பல்கலைக்கழகத்தில் உபரியாக இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர், அரசின் பல்வேறு கல்லூரிகளுக்கும், அரசுத்துறைகளுக்கும் நியமிக்கப்பட்டனர்.
- இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில், உபரியாக இருந்த இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் 92 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- இவர்கள் அனைவரும் அரசு வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- கல்வித் தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணியிட மாற்றம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.