ஆதித்தனார் கல்லூரியில் 59-ஆவது கல்லூரி நாள் விழா -கோலாகலமாக நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சிகள்

Update: 2024-02-23 02:58 GMT

திருச்செந்துர் ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் 59-வது கல்லூரி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில், கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜெபராஜ் மகிழ்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, டாக்டர் பட்டம் பெற்றவர்கள், 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் விருதுபெற்ற பேராசிரியர்கள் ஆகியோருக்கு ஊக்க பரிசு வழங்கினார். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசையும் அவர் வழங்கினார். மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த பொது அறிவு போட்டியில் முதலிடம் பெற்ற ஆதித்தனார் கல்லூரிக்கு 'காமராஜர் நினைவு சுழற்கோப்பை'யும் வழங்கப்பட்டது. கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன

Tags:    

மேலும் செய்திகள்