விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, வித்தியாசமான வில்வீரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மந்திரி ஓடை கிராமத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வித்தியாசமான சிலை மண்ணில் புதைந்தது. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்றுத்துறை மாணவர்கள் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள், நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிற்பம் வில்வீரன் என்றும் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம் என்றும் தெரியவந்தது. இந்த சிற்பத்தின் காலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.