உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்..? வெளியானது புது தகவல்

Update: 2023-11-07 07:29 GMT

உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜீயம், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சந்தீப் மேத்தா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்