2024 நாடாளுமன்ற தேர்தல் - திமுக தேர்தல் வியூகம்?
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை திமுக மாவட்ட செயலாளர்கள் தற்போது இருந்தே முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த 9ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பூத் கமிட்டி அமைப்பது குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட அளவில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் திமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில்100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.