இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி
சீனாவில் மீண்டும் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், தங்கள் விவரங்களை வருகிற 8 ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என இந்திய தூதரகம் கூறியுள்ளது...
இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி
சீனாவில் மீண்டும் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், தங்கள் விவரங்களை வருகிற 8 ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என இந்திய தூதரகம் கூறியுள்ளது.
சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் கொரோனா கால கட்டத்தின் போது இந்தியா திரும்பினர்.
இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனாவில் கல்வியை தொடர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை.
இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், சீனா திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தயாரிக்க உள்ளதாகவும் இந்த பட்டியல் சீன அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா திரும்பி கல்வியை முடிக்க விரும்பும் மாணவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை மே 8-ஆம் தேதிக்குள் தூதரகம் வழங்கியுள்ள படிவத்தில் நிரப்புமாறு கேட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.