இஸ்லாமியர்களை வீடற்றவர்களாக மாற்றத் துடிப்பதா? - பாஜகவிற்கு சீமான் கடும் கண்டனம்

மத்திய பிரதேசத்தை போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்து தகர்த்த துடிக்கும் பாஜக அரசிற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-21 10:59 GMT
இஸ்லாமியர்களை வீடற்றவர்களாக மாற்றத் துடிப்பதா? - பாஜகவிற்கு சீமான் கடும் கண்டனம் மத்திய பிரதேசத்தை போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்து தகர்த்த துடிக்கும் பாஜக அரசிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் டெல்லியில் அனுமன் ஜெயந்தி விழாவின் போது, நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை காரணம் காட்டி, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.
மேலும், மத்திய பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது நடைப்பெற்ற வன்முறைகளுக்காக, இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை போல், டெல்லி ஜஹாங்கீர் நகரிலும் வீடுகளை இடிக்க துடிக்கும் செயல், ஜனநாயகத்தைப் புதைக்குழியில் தள்ளும் கொடுஞ்செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்