ஏ.ஆர் ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவர்கள்..! குவியும் பாராட்டுக்கள்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை, இயற்கை பொருட்களை கொண்டு நுண்கலை சிற்பமாக உருவாக்கிய புதுச்சேரி மாணவருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏ.ஆர் ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவர்கள்..! குவியும் பாராட்டுக்கள்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை, இயற்கை பொருட்களை கொண்டு நுண்கலை சிற்பமாக உருவாக்கிய புதுச்சேரி மாணவருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரி அருகே பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருபவர் முத்தமிழ்ச்செல்வன். இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, தென்னை நார், வாழை மட்டை, பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு நுண்கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சியை பெற்றார். இந்நிலையில் ஓவியர் சந்தோஷ்நாராயணன் உருவாக்கிய "தமிழணங்கு" ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து, அதனை மாணவர் முத்தமிழ்செல்வன் சோலை, இலை, மற்றும் மூங்கிலை கொண்டு நுண்கலை சிற்பமாக வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த நுண்கலை சிற்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிற்பத்தை உருவாக்கிய மாணவர் முத்தமிழ்செல்வனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்சாமியும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.