72 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை : பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மும்பை மக்கள்!

அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளை தமிழகம் சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது.

Update: 2022-04-14 09:25 GMT
72 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை : பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மும்பை மக்கள்!

அம்பேத்கரின் பிறந்தநாளை, பிரமாண்ட கேக் வெட்டி மும்பை மக்கள் கொண்டாடினர். அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளை தமிழகம் சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது. அதே வேளையில் 72 அடி உயரத்தில் சிலை அமைத்து அவரது பிறந்த நாளை மகாராஷ்டிரா அரசு கொண்டாடியது. லத்தூர் நகரில் 28 நாட்களில் அமைக்கப்பட்ட 72 அடி உயர சிலையை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திறந்து வைத்தார். மேலும், அமைச்சர் வர்ஷா எக்தான் தலைமையில் 131 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டு அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்