"சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும்"
லாரிகள் வாடகை 25 சதவீதம் அதிகரித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை மேலும்10 சதவீதம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாரிகள் வாடகை 25 சதவீதம் அதிகரித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை மேலும்10 சதவீதம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய்யில் 70 சதவீதம், உக்ரைனில் இருந்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவில் இருந்தும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக இறக்குமதி தடைபட்டதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில், சுங்க கட்டணம் உயர்வு மற்றும் லாரிகள் வாடகை 25 சதவீதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சமையல் எண்ணெய் விலை மேலும்10 சதவீதம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.