"வீட்டிற்கு வா"... லீக்கான ஆபாச ஆடியோ... வசமாக சிக்கிய பேராசிரியர்!

கல்லூரி மாணவியை பேராசிரியர் தனது வீட்டுக்கு அழைக்கும் ஆபாச ஆடியோ வெளியான நிலையில், பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-08 02:24 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலை கல்லூரியில் மகேந்திரன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் செல்போனில் பேசி, வீட்டுக்கு வருமாறு அழைத்த ஆடியோ வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ வேகமாக பரவிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பொன்னேரி காவல் துறையும், கல்லூரி நிர்வாகமும் கல்லூரியில் வைத்து உதவி பேராசிரியர் மகேந்திரனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போது அவரை கைது செய்யவேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டதால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மகேந்திரன் மீது 5 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்