வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவாளர் அலுவலக உதவியாளர் மீதான புகார் மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவாளர் அலுவலக உதவியாளர் மீதான புகார் மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
பட்டுக்கோட்டை பதிவாளர் அலுவலக உதவியாளர் சந்திரசேகரன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. அதன் அடிப்படையில், தாமாக மனுவை விசாரணை எடுத்துக்கொண்ட நீதிபதி சுப்ரமணியம், பதிவுத்துறை செயலர், தஞ்சை ஆட்சியர், பதிவுத்துறை ஐஜி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மற்றும் சந்திரசேகரன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில், சந்திரசேகரனுக்கு 2 மெமோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புகார்கள் கடிதமாக வந்தால், நிர்வாக நீதிபதி மூலம், தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது, பொதுநல மனுவைப் போல உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.