கைதான கணவன், மனைவி - இருவருக்கும் ரூ.500 கோடி மதிப்பில் சொத்துக்களா? தீவிர விசாரணை
ஓட்டுநரை தாக்கியதாக ஓவிஆர் ரஞ்சித் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக அவரின் மனைவி சுனிதாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓட்டுநரை தாக்கியதாக ஓவிஆர் ரஞ்சித் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக அவரின் மனைவி சுனிதாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சின்னமலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் காங்கிரஸ் பிரமுகரான ஓவிஆர் ரஞ்சித்குமார் தன் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனிடையே அவரின் மனைவி சுனிதா, தன்னிடம் 12 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் அவர்கள் சுனிதாவை கைது செய்தனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள மனைகளை ஒரு கட்டத்தில் மிரட்டி பாதி விலைக்கு வாங்குவதும் தெரியவந்தது. கணவன், மனைவி இருவரும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதன் மூலம் 500 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.