தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்
நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடங்குகிறது. இதில், துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மே மாதம் 10ஆம் தேதி வரை மொத்தம் 22 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், சொத்து வரி உயர்வு, 'நீட்' விவகாரம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.