பேருந்துக்கு அடியில் சிக்கிய கார்.. திடீரென தீப்பிடித்து எரிந்த காட்சி

திருப்பூர் மாவட்டம் படியூரில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டும் எரிந்து சாம்பலானது.

Update: 2022-04-03 02:24 GMT
நீலகிரி மாவட்டம் தளகுந்தா பகுதியில் இருந்து குழந்தைகள் உள்பட சுமார் 25க்கும் மேற்பட்டோர், காங்கேயம் அடுத்த காமாட்சிபுரம் கோயிலுக்கு பயணித்தனர். திருப்பூர்-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது, படியூர் அருகே எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், பேருந்தின் அடிப் பகுதியில் கார் சிக்கியது. பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கிய நிலையில், காரில் இருந்த ஒருவர், மீளமுடியாதபடி தவித்தார். இதனிடையே, கார் தீப்பிடித்து எரிந்தது.

இதனால், காரின் மேல்நின்ற பேருந்தும் முழுமையாக தீக்கிரையானது. விபத்தில், காரில் சிக்கிய நபர், உடல்கருகி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காங்கேயம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இதில், திருப்பூர்-திருச்சி-கரூர் மார்க்க சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து முடங்கியது. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காரில் வந்தவர், யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்