BREAKING || தமிழகத்தில் 32.76% பேருந்துகள் மட்டுமே இயக்கம்
நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 32.76% பேருந்துகள் மட்டுமே இயக்கம்.
நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 32.76% பேருந்துகள் மட்டுமே இயக்கம். காலை 8 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் மட்டுமே இயக்கம். சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 3,175 பேருந்துகளில் 318 பேருந்துகள் மட்டுமே இயக்கம். விழுப்புரம் கோட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2,060 பேருந்துகளில் 573 பேருந்துகளே இயக்கம். சேலம் கோட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் 1,173 பேருந்துகளில் 445 பேருந்துகள் மட்டுமே இயக்கம். கோவை கோட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2,208 பேருந்துகளில் 476 பேருந்துகள் மட்டுமே இயக்கம்.