சமூக புறக்கணிப்பு - மீனவ குடும்பத்தினர் புகார்
கிராமத்தில் உள்ள நபா்கள் யாரும் எங்களிடம் பேசக்கூடாது, ரூ.40 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும், இல்லை என்றால் எங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டுவதாக மீனவ குடும்பத்தினர் புகார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் மீனவா் காலனியைச் சோ்ந்த 9 மீனவ குடும்பங்கள் அளித்த புகார் மனுவில், பூம்புகாா் மீனவா் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப் மாதம் மீனவா்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக இருதரப்பினா் பூம்புகாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இந்நிலையில் பூம்புகாா் மீனவ பஞ்சாயத்தாா் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனா். மீனவ கிராமத்தில் உள்ள நபா்கள் யாரும் எங்களிடம் பேசக்கூடாது, ரூ.40 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனா். இல்லை என்றால் எங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டுகின்றனா்.
இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.