ஆன்மிக புத்தக விற்பனை மையங்கள் - பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை மையங்கள் தொடங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், ஆணையர் குமரகுருபரன் தலைமையில் மண்டல ஆணையாளர்களுடன் கணொலிக் காட்சி வாயிலாக சீராய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கோயில்களுக்கு சொந்தமான காலி நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்குமாறும், 30 கோயில்களில் ஆன்மீக புத்தக விற்பனை மையங்கள் தொடங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, கருணை அடிப்படையில் பணி நியமனம் போன்ற பணிகளை தாமதமின்றி செய்து அறிக்கை அனுப்புமாறு கூறப்பட்டது.
மேலும், கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்,
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.