சி.வி.சண்முகம் கைது என வதந்தி... அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டை காவல்துறையினர் சுற்றிவளைத்ததாக வெளியான வதந்தியை நம்பி, அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் மீண்டும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டை காவல்துறையினர் சுற்றிவளைத்ததாக வெளியான வதந்தியை நம்பி, அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் மீண்டும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து, திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், சி.வி. சண்முகம், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். இருந்த போதிலும் அவர்கள் திரும்பிச் செல்ல தயக்கம் காட்டி விடிய விடிய காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு சிவி சண்முகம் அறிவுறுத்தியதால் தொண்டர்கள் கலைந்து சென்றனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் நள்ளிரவில் மரக்காணம் சென்றதை தவறாக புரிந்து கொண்ட அதிமுகவினர் சிவி சண்முகம் வீட்டின் முன்பாகக் குவிந்தது குறிப்பிடத்தக்கது.