குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை , 5 நாட்களுக்கு பிறகு கூண்டில் சிக்கியது..!
கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கழிவறை உபகரணங்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் உள்ள பொருட்களை கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஊழியர்கள் எடுக்க சென்றுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கழிவறை உபகரணங்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் உள்ள பொருட்களை கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஊழியர்கள் எடுக்க சென்றுள்ளனர். அப்போது குடோனுக்குள் சிறுத்தை இருப்பதை பார்த்து கதவுகளை மூடியுள்ளனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து 40க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த 5 நாட்களாக சிறுத்தை கூண்டில் சிக்காமல் தப்பித்து கொண்டே இருந்தது. வனத்துறையினரும் சிறுத்தையை பிடிப்பதற்காக 5 நாட்களாக காத்திருந்த நிலையில் சிறுத்தை கூண்டு அருகே வருவதும் பின்னர் விலகி செல்வதுமாக இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு கூண்டுக்குள் இருந்த இறைச்சியை உண்பதற்காக வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் சிறுத்தை உடல்நிலையை சோதனை செய்த பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.