வீடு வீடாக நடந்து சென்று முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர் சேர்க்கை

சென்னை கொளத்தூரில் திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது மட்டுமின்றி, வீடு வீடாக நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டனார்.

Update: 2021-12-29 10:24 GMT
திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெறுகிறது. இதில் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள திருவிக நகர் 18 மற்றும் 19 வது தெருக்களில் வீடு வீடாக நடந்து சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டார். அப்போது அவருடன் அமைச்சர்கள் நேரு, ஏவ வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். முன்னதாக வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் படிவம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த குழந்தைகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பெரியவர்களிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதையடுத்து, நேரடியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை முதலமைச்சர் பெற்று கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள மறைந்த  அர்ச்சகர் ரவிச்சந்திரன் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் அவர்களுடன் தேநீர் அருந்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்