பள்ளி மாணவருடன் ஆசிரியை காதல் திருமணம் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூரில் 17 வயது பள்ளி மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துக் கொண்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

Update: 2021-12-29 08:54 GMT
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகே அம்பாபூர் பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி. பி.எட் பட்டதாரியான இவர், 2019 ஆம் ஆண்டு தனியார் பள்ளிக்கு மாதிரி பயிற்சி வகுப்புக்காக சென்றுள்ளார். அப்போது 10 ஆம் வகுப்பு மாணவர் நவீன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ராசாத்தி -நவீன்குமார் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு இருதரப்பில் இருந்து நெருக்கடி கொடுத்தால், பூச்சிமருந்தை குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், சிகிச்சைக்கு பிறகு பூரணமாக குணமடைந்தனர். இந்நிலையில், மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கட்டாய திருமணம், தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை ராசாத்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்