கோவையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 6 வயது சிறுமி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-12-26 12:23 GMT
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ஸ்டூபன் என்பவரின் 6 வயது மகள் ரித்திகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்டுதுத்துவமனையில் நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி குழந்தைகள் நல சிறப்பு வார்டில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை எடுத்து வருகின்றனர். சிறுமியின் உயிழப்பால் அச்சமடைந்த பொதுமக்கள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்