மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில், வீடியோ வெளியிட்ட வழக்கில், மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மரிதாஸின் சர்ச்சையான வீடியோ குறித்து, மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கு தன் மீதான விரோதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யவும் கோரி, மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.