இளம்பெண்ணுக்கு ஓமிக்ரான் பாதிப்பு.. அரசு மருத்துவமையில் அனுமதி
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அப்பெண் ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனிமைப்படுத்தப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.