அரையாண்டு விடுமுறை விடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

Update: 2021-12-23 11:13 GMT
வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றனர். கூட்டத்திற்கு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு 13 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணம் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்