பயன்பாடில்லா பள்ளி கட்டடங்களை உடனடியாக இடிக்க சென்னை மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

பயன்பாடில்லா பள்ளி கட்டடங்களை உடனடியாக இடிக்க சென்னை மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

Update: 2021-12-21 15:00 GMT
பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை உடனடியாக இடிக்க உத்தரவிடுவதாக சென்னை மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கட்டட உறுதி உள்ளிட்ட நிலை குறித்து 48 குழுக்கள் மூலம் ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை 256 பள்ளிகளில் ஆய்வு முடிந்துள்ளதாக கூறும் மாவட்ட கல்வி அதிகாரி மார்ஸ், மீதமுள்ள பள்ளிகளில் இன்றும், நாளையும் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை வழங்கப்படும் என்றார். அடையாறில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆய்வுசெய்த பின், செய்தியாளரிடம் இதனை கூறிய அவர், பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை உடனடியாக இடிக்க  உத்தரவிடுவதாக கூறினார். சிறு பராமரிப்பு பணிகளை பொதுப் பணித்துறை மூலம் சரிசெய்ய, கல்வித் துறைக்கு கடிதம் பெற்று, அதன்மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்