வேளச்சேரி மேம்பாலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக சென்னை வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் 67 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டதற்கான விவரங்கள் அடங்கிய கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் வேளச்சேரி மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற முதலமைச்சர், பின்னர் வாகனத்தில் சென்றார். 100 அடி சாலையில் திரண்டிருந்த திமுகவினர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.