கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்.29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்றி அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஊட்டி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Update: 2021-10-01 10:57 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஒரு மர்ம கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜம்ஸீர் அலி உட்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர். 9 பேர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், வாளையார் மனோஜ் மட்டும் குன்னூர் சிறையில் உள்ளார். இந்த வழக்கின் விசாரணை, ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றத்தில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் மட்டும் ஆஜராகினர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மற்ற 8 பேரும் ஆஜராகாததால் வழக்கினை வரும் 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags:    

மேலும் செய்திகள்