16 வயது சிறுமி தூக்கு போட்டு தற்கொலை -விசாரணை நடத்தி வரும் போலீசார்
கிருஷ்ணகிரி அருகே 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகள் முத்தழகு அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். முத்தழகுக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த போதிலும் குணமடையாததால் விரக்தியில் இருந்த அவர், தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.