அதிகாலை நேரங்களில் வீடுகளில் செல்போன்களை திருடும் கும்பல் கைது
கோவையில், வீட்டில் ஆள் இருக்கும் போதே, நூதனமாகத் திருட்டில் ஈடுபட்ட கும்பல் காவல்துறையிடம் பிடிபட்டது.
கோவையில், வீட்டில் ஆள் இருக்கும் போதே, நூதனமாகத் திருட்டில் ஈடுபட்ட கும்பல் காவல்துறையிடம் பிடிபட்டது.வெரைட்டி ஹால் அருகே வீட்டிற்குள் 2 பெண்கள் புகுந்து செல்போன்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதை வைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, செளரியம்மாள், ரமேஷ், அந்து ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என்பது தெரிய வந்துள்ளது. தனது அக்காக்கள் திருடும் செல்போன்களை, தம்பி கள்ள சந்தையில் விற்க உதவியதும் அம்பலமானது. மேலும், சாமிக்கு கூழ் ஊற்ற வேண்டும், காணிக்கை செலுத்த வேண்டும் என்று கூறி வீடுகளை நோட்டமிட்டு அவர்கள் உலா வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அத்துடன் பரபரப்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார் பொதுமக்களை கவனமுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.