சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைக்கு சாமியார்கள் துரோகம் செய்கின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது...

Update: 2021-08-17 11:25 GMT
சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பாபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மக்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாகவும், ரட்சிப்பதாகவும் கூறும்  போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளதாகவும்,  

விரக்தியில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் கூறும் போலி சாமியார்கள் மற்றும் குருக்களின் கைகளிலேயே மக்கள் சிக்கிக் கொள்கின்றனர் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

இந்த சாமியார்கள் மீது  பொதுமக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையை பயன்படுத்தி உச்சகட்ட அளவில் மக்களை சுரண்டுகின்றனர் என்றும், 

பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைக்கு சாமியார்கள் துரோகம் செய்கின்றனர் என்றும் கூறினார். 

அனைத்து தரப்பட்ட வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுவதாக கூறிய நீதிபதி, 

தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடம் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

சாமியார்களை நம்பும் பக்தர்களுக்கு பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கிறதோ இல்லையோ, துரோகம் செய்யும் சாமியார்கள் மக்களை பயன்படுத்தி அதிக அளவிலான சொத்துகளையும், அதிகாரத்தையும், செல்வாக்கையும் சம்பாதித்து விடுகின்றனர் என்றும் நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்