நிலப்பிரச்சினையால் நடந்த மோதல் - ஒருவர் பலி, 7 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் அருகே நிலப்பிரச்சினை காரணமாக நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

Update: 2021-08-06 17:19 GMT
குளித்தலை வட்டம் சின்னயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவருக்கும் இவரின் சகோதரர் பொம்மாவுக்கும் இடையே நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்தது. இதனால் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கிருஷ்ணாவின் மாமனாரான காமன் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் இதில் தொடர்புடைய 7 பேர் ​மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்