கொரோனா 3ம் அலை : 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு
கொரோனா 3ம் அலையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா 3வது அலை விரைவில் வரவுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையொட்டி, 3ம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு, குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பணிக்குழுவினை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 13 பேர் கொண்ட குழுவினர் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கொரோனா பாதித்த குழந்தைகளைக் கையாளும் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல், பிரத்யேக படுக்கைகள் ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.