"வ.உ.சி துறைமுகத்தை மேம்படுத்த முடிவு"- டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பதில்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புற பகுதியை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் கப்பல்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புற பகுதியை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் கப்பல்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். திமுக எம்.பி டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான ஆய்வறிக்கைக்கு துறைமுகம் சார்பில் 5 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும் இந்த திட்டத்தின் கட்டுமான பணிக்காக இது வரை செலவு எதுவும் செய்யப்படவில்லை என்பதை மத்திய அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.