பப்ஜி மதன் வங்கி கணக்குகள் ஆய்வு.. மதன் சரணடைய திட்டம் எனவும் தகவல்
பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பப்ஜி மதன் வங்கி கணக்குகள் ஆய்வு.. மதன் சரணடைய திட்டம் எனவும் தகவல்
பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.சட்டவிரோதமாக பப்ஜி விளையாட்டை இணையத்தில் விளையாடியது, சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசியது என அடுத்தடுத்த புகார்கள் பப்ஜி மதன் மீது எழுந்தன.. இதனிடையே இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் இறங்கிய அவர்கள் மதன் சேலத்தில் இருப்பதை அறிந்ததோடு அங்கு விரைந்த போலீசார் மதனின் மனைவி கிருத்திகா மற்றும் அவரது தந்தையை பிடித்து விசாரித்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்ததில் மதனின் யூட்யூப் சேனலை நிர்வகித்து வந்தது கிருத்திகா தான் என உறுதியான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மதனின் யூட்யூப் சேனலில் விளையாண்டவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களின் பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. இதனிடையே மதன் சரணடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.