கன்னியாகுமரியில் தொடர் மழை - வேம்பனூரில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலங்கள்

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், வேம்பனூர் பகுதியில் சுமார் 200 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Update: 2021-05-28 05:22 GMT
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே வேம்பனூர் பகுதியில் பஞ்சி வாய்க்காலில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட உடைப்பை இதுவரை சரி செய்யாத நிலையில் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் 200 ஏக்கர் நெல், வாழை விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூன்று நாட்களாக வாய்க்காலில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதோடு நாற்றுகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையோடு கூறினர். 
Tags:    

மேலும் செய்திகள்