கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

யாஸ் புயல் பலவீனமான போதிலும், கேரளா மாநிலத்தில் இன்றும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-27 07:12 GMT
மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு  மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  இந்த மாவட்டங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று  வீசும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்பகுதியில்  மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.   பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அச்சன்கோவில் நதி, பம்பை நதி  மற்றும் மணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள  பல அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்